deimix/blog
Try the live demo
english

பட்டுக் கடைகளுக்கு WhatsApp — முழு வழிகாட்டி (2026)

பட்டுக் கடைகளுக்கு WhatsApp — முழு வழிகாட்டி (2026)

காலை 10 மணி. கடையில் billing counter-ல் ஒரு phone — அதுல 15,000-க்கும் மேல contacts இருக்கு. Aadi offer போட்டு 6,000 பேருக்கு message அனுப்பிட்டாங்க. மதியம் 2 மணிக்கு ஒரு notification: “உங்கள் WhatsApp number தற்காலிகமாக block செய்யப்பட்டுள்ளது.”

இது தமிழ்நாட்டில் எத்தனையோ பட்டுக் கடைகளுக்கு நடந்திருக்கு. Billing system-ல் இருந்து numbers எடுத்து, permission கேக்காம, message அனுப்பி, number போயிடுது. அந்த number-ல் தான் 10 வருஷமா business நடக்குது — bills-ல் print ஆகியிருக்கு, visiting card-ல் இருக்கு, customer-கிட்ட save ஆகியிருக்கு.

இந்த guide, கடை நடத்துறவங்களுக்காக. WhatsApp என்ன செய்யும், என்ன செய்யாது, எப்படி number-ஐ பாதுகாப்பா use பண்றது, எப்போ ஆரம்பிக்கணும் — எல்லாத்தையும் நேர்மையா சொல்றோம்.

உங்கள் கடையில் இது எப்படி work ஆகும்னு பாக்கணுமா? WhatsApp-ல் +91 96009 59581-க்கு “Hi” அனுப்புங்க — சில நொடிகளில் பதில் வரும்.

WhatsApp-ஏன்? SMS-ஓ Instagram-ஓ போதாதா?

ஒரு regular customer-ஓட மகள் Singapore-ல இருக்காங்க. Reception-க்கு maroon pattu வேணும், நேரில் வர முடியாதுன்னு சொல்றாங்க. Instagram reel பாக்க மாட்டாங்க. SMS படிக்க மாட்டாங்க. ஆனா WhatsApp-ல message அனுப்புவாங்க, 3 சேலை photos கேப்பாங்க, பார்க்காம வாங்குவாங்க — நம்பகமான கடைன்னு தெரியும்னாலே. இந்த sale வேற எந்த channel-லயும் நடக்காது. WhatsApp-ல மட்டுமே.

உங்கள் customer-கிட்ட ஏற்கனவே WhatsApp open ஆகியிருக்கு. கடையில இருந்து message வந்தா, படிப்பாங்க. ₹15,000-₹30,000 சேலைக்கு முடிவு எடுக்கிறவங்க, அவங்களுக்கு நம்பகமான கடையிலிருந்து வரும் ஒரு message மிகவும் powerful.

ஆனா — தவறா use பண்ணா விலை அதிகமாகும்.

Number ban ஆவது எப்படி — இந்த ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும்

Billing system-ல் இருந்து 8,000 numbers எடுத்து Aadi sale message அனுப்பினீங்க. அதுல 2019-ல ஒரு தடவை veshti வாங்கின ஒரு ஆளும் இருக்காரு, saree return பண்ணி அன்னைக்கே போன customer-ம் இருக்காங்க. இவங்கல்ல ஒருத்தர் “Report Spam” press பண்ணிட்டாங்க. அதுதான் WhatsApp-க்கு போதும்.

உங்களிடம் ஒருத்தருடைய number இருக்குன்னா, அவங்க WhatsApp message receive பண்ண agree பண்ணாங்கன்னு அர்த்தம் இல்ல. Bill print பண்ண number கொடுத்தாங்க — WhatsApp message-க்கு இல்ல.

ஒரே ஒரு rule: யாரோட permission இருக்கோ, அவங்களுக்கு மட்டும் message அனுப்புங்க. Permission இல்லாதவங்க report பண்றாங்க. Number quality rating குறையுது. போதும் — ban வருது.

Customer-கிட்ட இருந்து message வந்தா 24 மணி நேரம் free-ஆ reply பண்ணலாம். நீங்க முதல்ல அனுப்புனா — Aadi offer, Diwali message — ஒவ்வொரு message-க்கும் charge ஆகும். இந்த rule பத்தி detail-ஆ தெரியணும்னா: 24-Hour Window முழு விளக்கம்.

என்ன செய்யணும்? நான்கு specific பட்டுக் கடை moments

இந்த நான்கும் பட்டுக் கடைக்கு மட்டும் specific. Generic "new arrivals message அனுப்புங்க"ன்னு சொல்றதை விட இது different.

1. மூத்த மகளுக்கு bridal saree வாங்கினாங்க — இப்போ இளைய மகளுக்கு muhurtham வருது

3 வருஷத்துக்கு முன்னாடி அந்த அம்மா உங்க கடைக்கு வந்தாங்க. மகளுக்கு kanjivaram, reception saree, seer-க்கு sarees — எல்லாம் வாங்கினாங்க. Billing system-ல் அவங்க number இருக்கு.

அவங்களுக்கு new bridal collection photo ஒன்னு WhatsApp-ல அனுப்புங்க. "இந்த வருஷம் புதிய bridal collection வந்திருக்கு, ஒரு தடவை பாருங்க"ன்னு. அவங்க உங்க கடைக்கே வருவாங்க — வேற கடை கூட பார்க்க மாட்டாங்க.

இது marketing இல்ல. Already earn பண்ணி வச்சிருக்கிற customer-ஐ சரியான நேரத்தில் நினைவுபடுத்துவது.

2. Navratri / Muhurtham season — அவங்க decide பண்றதுக்கு முன்னாடியே உங்களுக்கு வரணும்

Seer-க்கு bride’s mother 12 sarees வேணும்னு panic-ஆ தேடுறாங்க — ஒரே வாரத்தில். Navratri-ல 9 நாளும் different ஊர் போகணும்னு ஒவ்வொரு நாளும் fresh saree வேணும்னு யோசிக்குறாங்க. இவங்க எங்க போவாங்கன்னு முடிவு எடுக்கிறது இன்னும் வீட்டில இருக்கும்போதே.

அப்போ உங்க கடையிலிருந்து ஒரு clean message — “Seer collection வந்திருக்கு, Navratri soft silks ready” — அவங்க mind-ல நீங்களே first. தினமும் 5 forward இல்ல — ஒரு message, சரியான நேரத்தில்.

3. இரவு 9 மணி கேள்வி — நாளைக்கு பதில் கொடுத்தா late ஆயிடும்

ஒரு customer message பண்றாங்க: “அண்ணா, window-ல இருந்த green Kanchipuram-க்கு red border வருமா?” — இரவு 9 மணிக்கு. கடை close ஆயிருக்கு. Salesgirl phone off.

நாளைக்கு பகல் 2 மணிக்கு பதில் கொடுத்தா — அவங்க அதுக்கு முன்னாடி temple road-ல இருக்கிற கடையில போய் வாங்கிட்டாங்க.

“நாளைக்கு காலையிலேயே photos அனுப்புவோம்” — ஒரு automatic first reply போதும், அந்த sale hold ஆகும். இந்த page-ல மேல “Hi” அனுப்பி பார்த்தீங்கன்னா, அந்த reply-ஐ நீங்களே இப்போ experience பண்ணிருக்கீங்க.

4. “ரவிக்கை ready-ஆச்சா?” calls நிறுத்துங்க

ஒரு நாள் billing counter-க்கு எத்தனை calls வருது — “Maggam work ரவிக்கை ready-ஆச்சா?” ன்னு? ஒவ்வொரு call-லயும் 4-5 நிமிஷம் போகுது. Billing rush-ல phone-ஐ பிடிக்க முடியல. "ரவிக்கை ready, pickup பண்ணிக்கோங்க"ன்னு ஒரு WhatsApp message அனுப்புனா — அந்த calls வராது. Customer-க்கும் வசதியா இருக்கும். Cheapest message type-ல ஒண்ணு — bonus, ஆனா அது main reason இல்ல.

செலவு — நேர்மையான பதில்

WhatsApp free இல்ல, scale-ல. நீங்க முதல்ல message அனுப்புனா — Aadi offer to 5,000 பேர் — Meta ஒவ்வொரு message-க்கும் charge பண்ணும். Customer message பண்ணி நீங்க reply பண்ணினா — much cheaper, often free.

India-ல marketing message-க்கு Meta approximately ₹0.86 per message charge பண்றாங்க (current rate verify பண்ணிக்கோங்க). Platform fee separate. GST 18% top-ல. 10,000 பேருக்கு Diwali message = Meta charges மட்டும் ₹8,600-க்கும் மேல.

இதுல detailed numbers இருக்கு: WhatsApp Business API India-ல என்ன செலவாகும்?.

WhatsApp என்ன செய்யாது: மோசமான saree-ஐ sell பண்ணாது. Rude-ஆ பேசிற staff-ஐ மாத்தாது. Customer-ஐ கதவுக்கு கொண்டு வரும் — மத்தது உங்களுக்கு.

ஒரு phone-ல் இருந்து வெளியேத்துங்க

இப்போ உங்க கடையோட WhatsApp யாரோட pocket-ல் இருக்கு? பெரும்பாலும் customers-கிட்ட நல்லா பேசுற ஒரு salesgirl-கிட்ட. அது okay — ஒரு நாள் வரை.

அவங்க திருமணமாகி சொந்த ஊர் போனா — அந்த phone-ல இருக்கிற 200 VIP customer conversations-ம் போகும். அவங்களும் போகலாம். Phone screen உடஞ்சா — எல்லாமே gone. Aadi rush-ல அது நடந்திருக்கு — யாரும் log in பண்ண முடியல.

உங்க customer relationship ஒரு pocket-ல இருக்கக்கூடாது. Business number-ல வச்சிருங்க. Staff மாறினாலும் customer-கள் இருப்பாங்க.

எப்போ ஆரம்பிக்கணும்?

இங்க ஒரு important deadline இருக்கு — தமிழ்நாட்டில் கடை வச்சிருக்கிறவங்க missed பண்றாங்க.

WhatsApp-ல properly broadcast பண்ண Meta verification வேணும். அது 2-3 வாரம் எடுக்கும். அப்புறம் template approval — இன்னும் சில நாள். Diwali-க்கு ready-ஆ இருக்கணும்னா September-ல ஆரம்பிக்கணும். October-ல ஆரம்பிச்சா verification October-ல clear ஆகும், templates November-ல approve ஆகும் — Diwali போயிருக்கும்.

September-ல ஆரம்பிச்சவங்க Diwali-ல warm list-ஓட, approved templates-ஓட, healthy number-ஓட broadcast அனுப்பினாங்க. October-ல ஆரம்பிச்சவங்க still waiting.

சுருக்கமா சொன்னா

  • Singapore customer, இரவு 9 மணி கேள்வி, seer season, bridal re-engagement — இந்த sales WhatsApp-ல மட்டுமே.
  • Permission இல்லாம blast பண்ணாதீங்க. Number போயிடும். Rebuild பண்றது மாசக்கணக்ல.
  • Muhurtham season-ல list-ல first-ஆ இருங்க. 9 மணி கேள்விக்கு auto reply வச்சிருங்க. “ரவிக்கை ready” calls நிறுத்துங்க.
  • Billing list-ல இருந்து opt-in பண்ணிக்கோங்க மட்டும் broadcast-க்கு use பண்ணுங்க.
  • Staff கிட்ட இல்லாம business number-ல வச்சிருங்க.
  • September-ல ஆரம்பிங்க — October late.

சேமிப்பு திட்டம் / Chit fund நடத்துறவங்களுக்கான Tamil guide விரைவில் இந்த blog-ல் வரும்.

கடை நடத்துறீங்களா? +91 96009 59581-க்கு WhatsApp-ல் “Hi” அனுப்புங்க. Form இல்ல, sales call இல்ல — live demo மட்டும்.

Prefer we reach out?

Leave your details and we’ll get in touch. Takes 20 seconds.

Prefer WhatsApp +91 96009 59581 or email hello@deimix.com.